சுகாதார சீர்கேடு

Update: 2026-08-02 15:17 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, ச.பெருமாள்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி அருகே குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகளில் சிலர் தீ வைத்து எரிக்கின்னறர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், புகையால் சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது. மேலும் இதனால் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்