விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேம்பாலத்தின் இருபுறமும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.