கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள அலசநத்தம் சாலையில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, இனி குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?