பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் இருந்து நேருநகர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கும் திட்டம் அமலில் இருந்தாலும், சிலர் குப்பைகளை சாலையோரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. அந்த சாலையில் சென்றாலே கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட நேரிடுகிறது. எனவே அந்த குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் வேண்டும்.