பார்வதிபுரம் அருகில் அனந்தன் பாலம் பெருமாள் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கால்வாயில் சிலர் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பாட்டில்களை கொட்டி உள்ளர். அந்த கழிவுகள் மடை பகுதியில் தேங்கி தண்ணீர் பாய்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாயில் பாயும் தண்ணீர் மாசடைந்து தொற்றுநோய் பரவுவதுடன், அந்த தண்ணீரை பயன்படுத்தும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் மடைப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அந்த பகுதியில் எச்சரிக்கை பதாகை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.