அழகப்பபுரத்தில் செங்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கால்வாய் மூலம் பாய்கிறது. அழகப்புரம் தெப்பகுளம் தெற்கு பகுதியில் இந்த கால்வாயில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் குளத்திற்கு பேச்சிப்பாறையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்றிட வேண்டும்.
-ராஜேஷ், அழகப்பபுரம்.