பொள்ளாச்சி நகராட்சி 26-வது வார்டு வாசுகி நகர் 2-வது வீதியில் குப்பைகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.