திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்டு பர்மா காலனியில் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் சாலையோரத்தில் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.