குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-06-28 16:21 GMT

பொம்மிடி ரெயில் நிலையத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரெயில் நிலையத்தை பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன காப்பகத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் முகம் சுளித்தவாறு தங்களின் இருசக்கர வாகனங்களை விட்டு செல்கின்றனர். குப்பைகளை அகற்றி வாகனங்கள் நிறுத்தும் இடத்தை தூய்மையாக பராமரிக்க ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்