சிவகங்கை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அவ்வழியே பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதிகளில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.