குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2026-07-05 14:01 GMT

சேலம் உடையாப்பட்டியில் உள்ள பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்