சென்னை பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவில் குப்பைத்தொட்டிகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலையின் ஓரத்திலேயே கொட்டுகின்றனர். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைத் தோட்டி வைக்கவேண்டும்.