குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2026-07-05 12:34 GMT

ஆசாரிபள்ளம் அருகே உள்ள வேம்பனூர் குளம் மத்திய அரசாங்கத்தால் ஈரவாழ் நிலம் என்று ராம் சார் குறியீடு பெற்ற குளம் ஆகும். இங்கு இயற்கை எழில் கொஞ்சம் வகையில் உள்ளதால், வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன. இந்த குளத்தில் கரையோரத்தில் சமீப காலமாக சிலர் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், குளக்கரையோரங்களில் மின்விளக்கு வசதியும் இல்லாததால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, குளங்கரையில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், மின்விளக்குள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்