ஆட்டையாம்பட்டி-ராசிபுரம் பிரதான சாலையோரம் பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே சுற்று வட்டாரத்தில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரித்து தினமும் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். மேலும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.