கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி தங்கநகர் பகுதியில் பல மாதங்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. தற்போது காற்று வீசுவதால் இந்த குப்பைகள் பறந்து தெருக்களிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து பொதுமக்களுக்குக் கடும் சிரமத்தையும், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றன. எனவே, தங்கநகர் மக்களின் நலன் கருதி இந்தக் குப்பைகளை அப்புறப்படுத்தச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.