சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகளை மர்மநபர்கள் வீசிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளி முன்பு சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி முன்பு கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன், வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.