திருப்பத்தூரில் பிரதான சாலையான செட்டித்தெருவில், சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகிறது. அதை, துப்புரவு பணியாளர்கள் சரிவர அள்ளுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை கால்நடைகள் உண்ணுகின்றன.
அதில், பிளாஸ்டிக் பொருட்களும், உடைந்த கண்ணாடி துகள்களும் இருப்பதால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் முறையாக அள்ள ேவண்டும்.