தாழக்குடி கடைவீதியில் ஒரு பிள்ளையார் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றுவதுடன், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைத்து குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.