திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடிக்கு உட்பட்ட பள்ளிவிடையை சேர்ந்த ராசையன் கோவில் சமயபுரம், மண்ணச்சநல்லூர் சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை காலிமனையில் கொட்டி, அவ்வப்போது லாரிகளில் ஏற்றிச்செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது எழும் புகை மூட்டத்தால், பொதுமக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிக்காமல், லாரிகளில் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.