அழகப்பபுரத்தில் செங்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கால்வாய் மூலம் பாய்கிறது. அழகப்புரம் தெப்பகுளம் தெற்கு பகுதியில் இந்த கால்வாயில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். குப்பைகள் தேங்கி காணப்பட்டதால் கால்வாயில் தண்ணீல் வடிந்தோட வழியில்லாத நிலை ஏற்பட்டதுடன், துர்நாற்றம் வீசி அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-ராஜேஷ், அழகப்பபுரம்.