வேலூர் புதிய பஸ் நிலையத்தின் முன்பக்கம் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. சமீபத்தில் வாகன மோதி அந்த மின் விளக்கு சற்று சாய்ந்த நிலையில் இருந்தது. கீழே விழாமல் இருக்க சிமெண்டால் பீடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த பீடம் தொட்டி போல் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ஒரு சிலர் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிய தொடங்கி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீதரன், வேலூர்.