சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இதனை கடந்து செல்லும் பாதசாரிகள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.