ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அச்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். துர்நாற்றத்தால் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை காணப்படுகிறது. குப்பைகளை அகற்றிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.