மதுரை ஜெய்ஹிந்த்புரம், சுந்தர்ராஜபுரம் மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை கொட்ட அப்பகுதியில் குப்பைத்தொட்டி வசதி ஏற்படுத்தி தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.