ஆண்டிப்பட்டி அருகே ராஜகோபாலன்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் சாலியர் மக்கள் மன்றம் பின்புறத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.