குப்பைகளால் மாசுபடும் கமண்டல நதி

Update: 2026-07-12 18:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படைவீடு வழியாக கமண்டல நதி ஓடுகிறது. வீரக்கோவில் முதல் அ.கோ.படைவீடு வரை கமண்டலநதியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் நதி மாசுபடுகிறது. கமண்டல நதியில் ஓடும் தண்ணீரை விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரமாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கமண்டல நதியில் குப்பைகளை கொட்டி தண்ணீர் மாசுபடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழரசன், படைவீடு. 

மேலும் செய்திகள்

குப்பைமேடு