தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-02-15 07:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர்- இலந்தைகுளம் செல்லும் சாலையோரங்களில் சிலர் இறைச்சி  மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதில் எழும் துர்நாற்றத்தால் அவ்வழியே பயணிக்கும் பாதசாரிகள், வாகனஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம்  உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட வழித்தடத்தில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்