குப்பைக்கூடமாக மாறும் கால்வாய்

Update: 2026-02-15 10:18 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மலையம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கால்வாய் அருகே சமீப காலமாக பொதுமக்கள் குப்பைகளை வீசுவதால் குப்பைகள் ஆக்கிரமித்து குப்பைக்கூடமாக மாறிவருகிறது. இதனால் கால்வாயில் உள்ள நீரும் அசுத்தம் அடைகிறது. மேலும் குப்பைகள் அதிக துர்நாற்றம் வீசுவதால் அதனை கடந்து செல்லும் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால் நோய்கள் ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்