பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் கொழுமம்-பழனி சாலையோரம் இறைச்சி கழிவுகள், குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. தற்போது சாலையோரம் கொட்டியுள்ள குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.