கம்பம்-ஏகலூத்து சாலையோரம் ஆலமரத்துக்குளம், சிக்காலிகுளம் ஆகிய குளங்களுக்கு செல்லும் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் மரக்கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இரவு நேரங்களில் மர்மநபர்கள் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஓடையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.