மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை நிலையூர் கால்வாய் பாலம் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி அதில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்றச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன் அப்பகுதி மக்களுக்கும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.