சென்னை திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட திருவேற்காடு-அம்பத்தூர் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் கடந்த சில வாரங்களாக அகற்றப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளன. இதனால் குப்பைக் கிடங்கு நிரம்பி குப்பைகள் மலைப்போல் தேங்கி சாலையிலும் கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும்போது மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.