விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழக்கோதை நாச்சியார்புரத்தில் சாலையில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.