வேலூர் சைதாப்பேட்டை பெரியதன முத்துசாமி தெருவில் உள்ள தொடக்கப்பள்ளி எதிரில் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைத் தொட்டிகள் இல்லாத நிலையில், தெரு முழுவதும் குப்பைகள் பரவி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், குப்பைத்தொட்டி வைத்தும் பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவதாஸ், வேலூர்.