வேலூர் சத்துவாச்சாரியில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அம்மா உணவகம் உள்ளது. அந்த உணவகம் செல்லும் வழியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அப்பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் அந்தக் குப்பைகளில் மேய்வதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வழிகளில் இடையூறாக குப்பைகள் சிதறி கிடக்கிறது. இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.