ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே திம்மராயன் தெருவில் சாலையோரம் ஏராளமானோர் குப்பைகளை கொட்டி செல்கின்றன. இதை அகற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகளிடம் கூறினாலும், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் சில நேரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்ற வந்தால், அவர்கள் குப்பைகளை கொண்டு செல்லாமல் குப்பைகளை குவித்து தீ வைத்து எரித்துவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமநாதன், ஜோலார்பேட்டை.