நல்லம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வணிக நிறுவனங்கள், இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து சேரும் குப்பை கழிவுகளை, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையோரம் கொட்டுகின்றனர். தினமும் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், டன் கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை கழிவுகளை அகற்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.