கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி நாவல் நகர் 5-வது தெரு முன்பகுதியில் சாலையில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை தெருநாய்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கிளறுவதால் சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாவதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.