சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?