கோவை சிங்காநல்லூர் 61-வது வார்டு தேவேந்திர வீதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இது தவிர அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.