வள்ளியூர் ரெயில் நிலையத்தில் முறையாக குப்பைத்தொட்டிகள் அமைக்கப்படாததால், பிளாட்பாரங்களில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. மேலும் அவைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டும், பயணிகளை துரத்தி கடித்தும் வருகின்றன. எனவே ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.