கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.