போத்தனூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் உள்ள கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் பள்ளிகள் உள்ளதால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அத்துடன் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் தின்கின்றன. இதனால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.