வீதியில் குவியும் குப்பை

Update: 2026-02-09 05:59 GMT

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ளது எஸ்.என்.வி.எஸ். 3-வது வீதி. இந்த வீதியின் ஒரு மரத்தில் இருந்து விழும் இழைகள் அப்பகுதியில் குப்பை போல் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக அவ்வப்போது அதில் தீ வைத்தும் விடுகின்றனர். இதனால் இதிலிருந்து எழும்பும் புகை சுற்றுப்புற மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுவாசக்கோளாறை ஏற்படுத்துகிறது. மேலும், குப்பை குவிந்து கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த குப்பையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பவதாரணி, திருப்பூர்.

மேலும் செய்திகள்