சுகாதார சீர்கேடு

Update: 2026-02-08 19:48 GMT

வேலூரை அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை நடக்கும் இடத்தில் உடைந்த குப்பைத்தொட்டி ஒன்று உள்ளது. அதிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கீழே குவிந்து கிடக்கிறது. அந்த இடத்தில் எந்நேரமும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய், பொய்கை.

மேலும் செய்திகள்