குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-03-08 10:53 GMT

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் இருந்து வீரபாண்டிக்கு செல்லும் ரோட்டின் ஓரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அந்த ரோட்டில் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்சத்யா, வீரபாண்டி.

மேலும் செய்திகள்