சாலையோரத்தில் கழிவுகள்

Update: 2026-03-08 13:44 GMT

பெரியநாயக்கன்பாளையத்தில் மின் மயானம் உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு வரும்போது, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் உறவினர்கள் கொண்டு வருகின்றனர். பின்னர் அந்த பொருட்களை அங்குள்ள சாலையோரங்களில் வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் சாலையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு கிடக்கும் கழிவுகளை அகற்றவும், மீண்டும் வீசாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்