சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-03-08 10:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட வண்டலூர் பைபாஸ் - மாங்காடு செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சில சமயங்களில் மாடுகள் அதனை சாப்பிடுவதால் நோய்வாய்படும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்