வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் அதிக அளவு இறந்த வண்ணம் உள்ளது. மேலும் நோய் வாய்ப்பட்டு இருக்கும் கோழிகளை நடுப்பட்டி ஏரி, அளவாய்ப்பட்டி ஏரி போன்ற பகுதிகளில் வீசுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு இருந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.