வேலூர் பாலாற்றில் மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே பாலாற்றில் குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தென்னரசு, வேலூர்.